மறுசுழற்சி உலோகக் கிடங்கு தீயில் எரிந்து முற்றிலும் நாசம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 26: கோலாலம்பூர் சுங்கை பீசியில் உள்ள மறுசுழற்சி உலோகக் கிடங்கு , நேற்றிரவு தீயினால் தரைமட்டமானது. தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நேற்று இரவு 9.06 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
இரவு 10.20 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் ஸ்கிராப் யார்ட்  பகுதி 100% தீயில் எரிந்து நாசமானது.
 இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *