காலாவதியான, நெளிந்த மற்றும் துருப்பிடித்த உணவுப் பொருட்களை எம்.பி.டி.கே. பறிமுதல் செய்தது!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஆக. 29 -

கிள்ளான், ஜாலான் செமெந்தா உத்தாமா வட்டாரத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில், காலாவதியான, நெளிந்த மற்றும் துருப்பிடித்த டின்களில் அடைக்கப்பட்ட 13 வகையான தயார் நிலை உணவுப் பொருட்களை கிள்ளான் மாநகர் மன்றமான எம்.பி.டி.கே. பறிமுதல் செய்தது.

உணவுப் பாதுகாப்பு அம்சங்களை வணிகர்கள் எப்போதும் கடைபிடிப்பதை உறுதி செய்யும் நோக்கில் நடைபெற்ற இந்நடவடிக்கையில், எட்டு மினி மார்க்கெட்டுகள் மற்றும் மளிகைக் கடைகளில் உணவு ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாநகர் மன்றம் தெரிவித்தது.

இந்த பறிமுதல் நடவடிக்கையைத் தவிர்த்து, வணிக உரிமம் இல்லாதது, வளாகம் தூய்மையின்றி காணப்பட்டது மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்ளாதது ஆகிய குற்றங்களுக்காக ஐந்து குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்று மாநகர மன்றம் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

வர்த்தகர்கள் தங்கள் வளாகத்தின் தூய்மையைப் பராமரிக்கவும், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கேடு உண்டாக்கும் உணவுகளை விற்க வேண்டாம் என்று  மாநகர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *