1 மில்லியன் மதிப்பிலான தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல்! MCMC அதிரடி
- Shan Siva
- 07 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 7: மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC), சிலாங்கூரில் நடத்திய சோதனைகளில் 10,112 சந்தேகத்திற்குரிய அங்கீகரிக்கப்படாத தகவல் தொடர்பு சாதனங்களை பறிமுதல் செய்ததாகத் தெரிவித்துள்ளாது. அதன் மொத்த மதிப்பு சுமார் RM1 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் பெறாத மற்றும் MCMC நிர்ணயித்த தொழில்நுட்பத் தரநிலைகளுக்கு இணங்கத் தவறிய தகவல் தொடர்பு சாதனங்களை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் செயல்படும் ஒரு நிறுவனத்தை இந்த நடவடிக்கை குறிவைத்ததாக MCMC தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் வயர்லெஸ் மூடிய-சுற்று தொலைக்காட்சி (CCTV) கேமராக்கள், கணினிகள், அச்சுப்பொறிகள், மொபைல் போன்கள் மற்றும் வைஃபை ரவுட்டர்கள் ஆகியவை அடங்கும் என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த சாதனங்களின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பல மின் வணிக தளங்கள் மற்றும் சமூக ஊடக சேனல்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதையும் MCMC கண்டறிந்துள்ளது.
ஆரம்பத்தில் மொத்தம் 40 பேர் விசாரிக்கப்பட்டனர். அதே நேரத்தில் நிறுவன இயக்குநர், செயல்பாட்டு மேலாளர், கிடங்கு உதவியாளர், நேரடி ஒளிபரப்பு தொகுப்பாளர் மற்றும் உள்ளடக்க உருவாக்குநர்கள் உட்பட பல நபர்களுக்கு ஒன்பது வருகை அறிவிப்புகள் வழங்கப்பட்டன.
அறிவிப்பில் அவர்கள் சைபர்ஜெயாவில் உள்ள MCMC தலைமையகத்தில் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய ஆஜராக வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத தகவல் தொடர்பு சாதனங்களின் விற்பனை மற்றும் பயன்பாடு தேவையான தொழில்நுட்ப தரநிலைகளை பூர்த்தி செய்யாததால், நுகர்வோர் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று ஆணையம் எச்சரித்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



