பாலிங் அருகே இரண்டு வாகனங்கள் மோதல் – இருவர் காயம்
- Surendran Sumdraraj
- 12 Mar, 2026
பாலிங், மார்ச் 12-
கெடா மாநிலத்தின் பாலிங் மாவட்டத்தில் இன்று அதிகாலை இரண்டு வாகனங்கள் மோதிய விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிண்டெண்ட் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ தெரிவித்ததாவது, இன்று அதிகாலை 1.27 மணியளவில் கம்போங் பாடாங் செடோல், தவார் பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதியதாகத் தகவல் கிடைத்தது.
முதற்கட்ட விசாரணையில், புரோட்டான் X50 கார் ஒன்றை 56 வயதுடைய பெண் ஒருவர் கூலிம் பகுதியிலிருந்து பாலிங் நோக்கி செலுத்தி வந்ததாகவும், மறுபுறம் பிக்கப் வாகனத்தை 57 வயதுடைய உள்ளூர் ஆண் ஒருவர் பாலிங் பகுதியில் இருந்து கூலிம் நோக்கி செலுத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இரண்டு வாகனங்களும் எதிரெதிர் திசையில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் இரு வாகன ஓட்டிகளும் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் உடனடியாக பாலிங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கு முன் வெளியான தகவலின்படி, இந்த விபத்தில் புரோட்டான் X50 காரில் இருந்த பெண் ஒருவர் வாகனத்தில் சிக்கிக் கொண்டதாகவும், அவரை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



