பள்ளிகளுக்கு வெளியிலும் மாணவர்களின் பாதுகாப்பைப் பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்! கல்வி அமைச்சர் உத்தரவு!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 29,

பள்ளிகளுக்கு வெளியில் மாணவர்கள் பாதுகாப்புடன் இருப்பதைப் பள்ளி நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek உத்தரவிட்டார். நேற்று முன்தினம் நீலாயில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் கழிவுநீர் வடிகாலில் விழுந்து 9 வயது மாணவரான Abdul Fatah Khairol Rizal உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிப்பதாகவும் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரைக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும்  Fadhlina Sidek தெரிவித்தார்.

இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் நிகழ்ந்திருப்பதால் சம்பவத்திற்குத் தொடர்புடைய 9 பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்திருப்பதாக நெகிரி செம்பிலான் மாநிலக் காவல்துறைத் தலைவர் Datuk Alzafny Ahmad தெரிவித்தார்.உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்ததுடன் சம்மந்தப்பட்ட பள்ளியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் கல்வி அமைச்சர் Fadhlina Sidek நம்பிக்கை அளித்தார். இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பள்ளி நிர்வாகம் பள்ளி வளாகத்திலும் பள்ளியின் வெளிப்புறங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் Fadhlina Sidek உத்தரவிட்டார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *