மலேசியாவில் ROHINYA பள்ளியா? கல்வி அமைச்சு நடவடிக்கை!
- THINAGAREN SANGGAREN
- 13 Jun, 2026
ஜூன் 13,
கோலா திரங்கானுவில் ரோஹின்யா மாணவர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஒரு தொடக்கப்பள்ளியைக் கல்வி அமைச்சு அங்கீகரிக்கவில்லை என கல்வி துணை அமைச்சர் Wong Kah Woh விளக்கமளித்தார். இது குறித்து கிடைக்க பெற்ற புகாரின் அடிப்படையில் மாநிலக் கல்வி இலாகாவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் Wong Kah Woh தெரிவித்தார். முறையான ஆய்வுகளுக்குப் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி துணை அமைச்சர் Wong Kah Woh உறுதியளித்தார்.
மியன்மார், வியட்நாம் உள்நாட்டுப் போரின் போது அகதிகளாக ஆசிய நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்த ROHINYA மக்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு மலேசிய அரசு தடையாக இருக்காது என்றாலும் அவர்களுக்கென தனியாக ஒரு பள்ளிக்கூடத்தை அமைப்பது அவசியமற்றது என Wong Kah Woh தெரிவித்தார். மலேசியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் ஆரம்பக் கல்விகள் போதிக்கப்பட்டு வருவதையும் கல்வி துணை அமைச்சர் Wong Kah Woh சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



