14 மாணவர்களுடன் கவிழ்ந்த பள்ளி வேன்! 17 பேர் காயம்!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 18,

இன்று காலை கட்டுப்பாட்டை இழந்த பள்ளி வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 மாணவர்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர். இன்று காலை 7 மணிக்கு விபத்துக்குறித்தான தகவல் கிடைத்ததும் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணைய RAUB SELAMAT தெரிவித்தார். ஜொகூர் பாருவிலிருந்து JALAN ABDUL SAMAD சாலையில் 14 பள்ளி மாணவர்களுடன் வேன் பயணித்ததாகவும் சாலையின் ஓரமிருந்த குழியை வேன் மோதியிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

காயமடைந்த 14 மாணவர்களும் வெவ்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 9 முதல் 15 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் 11 மாணவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் மூவர் சிராய்ப்புக் காயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் விபத்தில் பாதிக்கப்பட்டவர் SULTANAH AMINAH அரசு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருவதாகவும் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணைய RAUB SELAMAT உறுதிப்படுத்தினார். பள்ளி வேன் விபத்துக்குள்ளானது குறித்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் ஆதரமற்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணைய RAUB SELAMAT கேட்டுக் கொண்டார். .

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *