486 இந்திய மாணவர்களுக்கு RM 12லட்சம் கல்வி நிதி! – சிலாங்கூர் அரசு!
- Sangeetha K Loganathan
- 07 Jul, 2025
ஜூலை 7,
சிலாங்கூரில் உள்ள 486 இந்திய மாணவர்கள் உயர்க்கல்வியை மேற்கொள்ளவதற்காகச் சிலாங்கூர் மாநில அரசு RM 12 லட்சம் ரிங்கிட் ஒதுக்கியிருந்த நிலையில் நேற்று 486 இந்திய மாணவர்களுக்கு அந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. நேற்று சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Dato' Seri Amiruddin Shari தலைமையில் சிலாங்கூர் மாநில அரசு கட்டிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வி உதவி நிதிக்கான காசோலையை எடுத்து வழங்கினார். இந்த கல்வி உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Dato' Seri Amiruddin Shari, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Paipparadu Veraman, சிலாங்கூர் மாநிலத் துணைச் செயலாளர் Dato’ Johary bin Anuar ஆகியோருடன் உதவி நிதி பெறும் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
வறுமையில் இருக்கும் இந்திய மாணவர்கள் எந்தவொரு தடையுமின்றி உயர்கல்வியைத் தொடர இந்த RM 1,237,854 ரிங்கிட் பெரும் உதவியாக இருக்கும் என தாம் நம்புவதாகவும் சிலாங்கூர் மாநிலத்தில் வறுமையின் காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாத சூழுலில் நம் இளம் சமூகம் தவிக்க கூடாது எனும் பொறுப்பு சிலாங்கூர் அரசுக்கு எப்போதும் இருக்கும் என சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Dato' Seri Amiruddin Shari நம்பிக்கை அளித்தார். இந்த RM 1,237,854 ரிங்கிட் கல்வி உதவிநிதி என்பது B40 தரத்தில் இருக்கும் 486 சிலாங்கூர் இந்திய மாணவர்களுக்கு டிப்ளோமா இலங்கலைக் கல்விக்காகப் பகிர்ந்தளிக்கப்படும் என சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Dato' Seri Amiruddin Shari நம்பிக்கை அளித்தார்.
Kerajaan Negeri Selangor menyalurkan RM1.2 juta bantuan pendidikan kepada 486 pelajar India B40 bagi menyambung pengajian tinggi. Menteri Besar Dato' Seri Amirudin Shari berkata usaha ini membuktikan komitmen membasmi kemiskinan pendidikan tanpa mengira latar belakang kaum.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



