சிலாங்கூர் மெந்திரி பெசார் மாற்றமா? கட்சியின் முடிவை ஏற்பது நல்லது!
- Thinagaren Sanggaren
- 24 Nov, 2025
நவம்பர் 24,
சிலாங்கூர் மெந்திரி பெசாராக இருக்கும் Datuk Seri Amirudin Shari முழுமையாக 5 ஆண்டுகள் மெந்திரி பெசாராக இருக்க வேண்டும் என பி.கே.ஆர் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவரும் அமைச்சருமான Datuk Fahmi Fadzil தெரிவித்தார். Datuk Seri Amirudin Shari அமைச்சராவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என்றாலும் தற்போது உயரிய பொறுப்பிலிருக்கும் Datuk Seri Amirudin Shari அவரின் 5 ஆண்டுகள் பதவியை முழுமையாக நிறைவு செய்த பின்னர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.
சிலாங்கூர் மெதிரி பெசாராக Datuk Seri Amirudin Shari நியமிக்கப்பட்டிருப்பது பி.கே.ஆர் கட்சியின் முடிவு. பி.கே.ஆர் கட்சியின் முடிவை அதன் உறுப்பினர்கள் ஏற்பது நிறைவான அரசியல் கட்சிக்கான ஒரு வலுவான கட்டமைப்பை வழங்கும் என அவர் தெரிவித்தார். Nurul Izzah அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்தும் சிலாங்கூர் மெந்திரி பெசாராகுவது குறித்தும் அமைச்சரவையிலும் சரி, பி.கே.ஆர் தலைமை கூட்டத்திலும் சரி, எந்தவொரு விவாதங்களும் நடைபெறவில்லை என Datuk Fahmi Fadzil விளக்கமளித்தார். அதே வேளையில் பி.கே.ஆர் கட்சியின் தலைமையை மீறி எந்தவொரு பதவிகளும் மாற்றியமைக்கப்படாது என Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



