223 கிலோ போதைப்பொருள்களுடன் இரு கும்பல்கள் கைது! சிலாங்கூர் காவல்துறை!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 7,

சிலாங்கூர் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 223 கிலோ போதைப்பொருள்களுடன் இரு கும்பல்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Dato’ Shazeli Kahar தெரிவித்தார். சிலாங்கூர் மாநிலக் காவல்துறையும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் இணைந்து சுபாங் ஜெயாவிலும் செர்டாங்கிலும் இச்சோதனையை மேற்கொண்டதில் RM25.15 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள்களும் RM158,350 மதிப்பிலான சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Dato’ Shazeli Kahar தெரிவித்தார். 

சுபாங் ஜெயாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் RM19.76 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள்களுடன் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செர்டாங்கில் மேற்கொல்லப்பட்ட சோதனையில் RM5.4 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் Dato’ Shazeli Kahar தெரிவித்தார். மொத்தம் கைது செய்யப்பட்ட 7 பேரில், ஒரு பெண்ணும் அடங்குவதாக Dato’ Shazeli Kahar தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 750,000 க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் 30 முதல் 56 வயதுக்குற்பட்ட உள்ளூர்வாசிகள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மேலதிக விசாரணைக்காக அவர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Dato’ Shazeli Kahar தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *