போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது!

top-news

ஜூன் 6,

சிலாங்கூரின் 4 மாவட்டங்களில் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையர் மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 26 கிலோ MDMA உட்பட ekstasi, ketamin, eramin என பல்வேறு வகையிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பும் உபகரணங்களின் மதிப்பும் சுமார் RM5,110,731,10 என கணக்கிடப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 7 ஆண்களும் 1 பெண்ணும் உள்ளூர்வாசிகள் என்றும் மற்றொரு பெண் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 9 பேரும் வாடகை வாகனமோட்டுவது, தனியார் கடை ஊழியர்கள், உணவு விற்பனையாளர்கள், சிகையலங்காரக்காரர் என பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் சுமார் 8 மாதங்களாக இந்த போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

Sembilan individu termasuk dua wanita ditahan dalam serbuan polis di empat daerah di Selangor berkaitan sindiket pengedaran dadah. Pelbagai jenis dadah bernilai RM5.1 juta dirampas. Mereka disyaki aktif dalam kegiatan itu sejak lapan bulan lalu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *