பேரணியில் பங்கேற்பது தனிநபர் உரிமை-அமைச்சர்

top-news

ஜொகூர் பாரு, பிப். 16-

மலேசிய அரசியலமைப்பின் கீழ் ஒவ்வொரு குடிமகனுக்கும் அமைதியான முறையில் கூடுவதற்கான உரிமை உண்டு; அதில் முன்னாள் பொருளாதார அமைச்சர் ரபிசி விதிவிலக்கல்ல என பிகேஆர் தகவல் பிரிவு தலைவர் பாஹ்மி பாடசாலை தெரிவித்தார் .

முன்னதாக  நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற “அசாம் பாக்கியைக் கைது செய்” எனும் பேரணியில் முன்னாள் துணைத் தலைவர் ரபிஸி கலந்து கொண்டது தொடர்பாக இதுவரை கட்சியில் விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்றார்.

“ஒருவர் தாம் சரி என்று நினைப்பதைச் செய்வது அவரது உரிமை. அரசியலமைப்பு குடிமக்களுக்கு கூடும் சுதந்திரத்தை வழங்குகிறது,” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், கோலாலம்பூர் காவல் துறை தலைவர்  தெரிவித்ததுபோல், பேரணியில் சுமார் 150 முதல் 200 பேர் வரை மட்டுமே கலந்து கொண்டதாகவும், பாதுகாப்பைப் பாதிக்கும் சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பாஹ்மி குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *