தற்காப்புக் கலை கலாச்சாரத் திருவிழா! திரளாகப் பங்கேற்ற தற்காப்புக் கலை வீரர்கள்! – டாக்டர் மதியழகன் பெருமிதம்!
- Thinagaren Sanggaren
- 24 Jul, 2025
ஜூலை 24,
ஒவ்வொரு சமூகத்திற்கும் பாரம்பரியத் தற்காப்புக் கலைகள் வாழையடி வாழையாகப் பல தலைமுறைகள் கடந்து இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும். அப்படியான பாரம்பரியத் தற்காப்புக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் தார்மீகப் பொறுப்பு நமக்கு இருப்பதை உணர்ந்து மதீஸ் தயாரிப்பு நிறுவனம் மலேசியப் பன்முகக் கலாச்சாரத் தற்காப்புக் கலை போட்டியைச் சுற்றுலா கலைக் கலாச்சார அமைச்சின் ஆதரவுடன் கெடாவில் நடத்தியதாக மதீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மதியழகன் நாராயணசாமி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 13 முதல் முறையாக இப்போட்டியை நடத்தியதாகவும் அரசாங்கத்தின் ஆதரவும் தற்காப்புக் கலை வீரர்களின் ஆதரவும் பெரிதும் இருந்ததால் இவ்வாண்டு இரண்டாவது முறையாகக் கடந்த 20 ஜூலை கெடாவில் இப்போட்டியை நடத்தியதாகவும் மதீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மதியழகன் நாராயணசாமி தெரிவித்தார். தமிழ், சீனம், மலாய் என மூவினத்தவர்களின் தற்காப்புக் கலைகளையும் ஒருங்கிணைத்து போட்டியாகவும் கண்காட்சியாகவும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டதில் சுமார் 150க்கும் மேற்பட்ட தற்காப்புக் கலை வீரர்கள் பங்கேற்றனர்.
சீலாட், சிலம்பம், வூஷு என 5,000 ஆண்டுகளுக்கும் பழமையானத் தற்காப்புக் கலைகளை அழியாது பாதுகாக்க யுனேஸ்கோ பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் மலேசியாவில் வாழும் தற்காப்புக் கலை வீரர்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என மதீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மதியழகன் நாராயணசாமி கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தற்காப்புக் கலை வீரர்களுக்குச் சுற்றுலா கலைக் கலாச்சார அமைச்சின் அங்கீகாரமும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டுள்ளதை மதீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் மதியழகன் நாராயணசாமி சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



