சபாவில் சாலைகள் ‘நிலவில் நடப்பது’ போல உள்ளது – கினபாத்தாங்கான் எம்.பி. கேள்வி

top-news

கோலாலம்பூர், பிப். 4-

 சபாவில் உள்ள சாலைகளின் நிலை மிக மோசமாக இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களவையில் இன்று கடுமையாக சுட்டிக்காட்டினார். கினபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் குர்நியாவான் நைம் மொக்தார், வாய்மொழி கேள்வி நேரத்தில் சபா சாலைகள் நீண்ட காலமாக மோசமான நிலைமையில் இருப்பதாக கூறினார்.

சபாவில் பயணம் செய்பவர்கள் தினமும் வாகன சேத அபாயத்தை எதிர்கொள்வதாகவும், சாலை மேற்பரப்பில் உள்ள குழிகள் மற்றும் சேதங்கள் காரணமாக “நிலவில் நடப்பது போல” அனுபவம் இருப்பதாகவும் அவர் உவமை செய்தார். இதன் காரணமாக பலர் தினசரி வாகன பழுது, டயர் சேதம் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலை சந்திப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், தீபகற்ப மலேசியாவிலும் சபாவிலும் கூட்டாட்சி சாலைகளின் பராமரிப்பு முறைகளில் வேறுபாடு உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். “தீபகற்பத்தில் சாலைகள் நன்றாக இருக்கின்றன, ஆனால் சபாவில் நிலை மிக மோசமாக உள்ளது. பராமரிப்பு வகை வேறுபடுகிறதா?” என அவர் கேட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *