ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் கொலை! – ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை

top-news

செய்தி - வெற்றி மைந்தன்

அமெரிக்கா, நவ. 26-

உலகம் முழுவதும் 2024-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 50,000 பெண்களும் சிறுமிகளும் தங்கள் கணவன், காதலன் அல்லது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) வெளியிட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண் தனக்கு மிகவும் நெருக்கமான நபராலேயே கொல்லப்படுகிறார் என்பது இதன் பயங்கரமான பொருள்.

ஐ.நா. போதைப்பொருள், குற்றப் பிரிவு, ஐ.நா. பெண்கள் அமைப்பு இணைந்து “உலகளாவிய பெண்களுக்கு எதிரான கொலை” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான அனைத்துலக தினத்தையொட்டி (நவம்பர் 25) வெளியிடப்பட்டது.

அறிக்கையின் முக்கிய அதிர்ச்சித் தகவல்கள்:

  • உலகில் கொல்லப்படும் பெண்களில் 60 சதவீதம் பேர் தங்கள் கணவன், காதலன், தந்தை, மாமா, சகோதரன் அல்லது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்படுகின்றனர்.
  • ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் இந்த எண்ணிக்கை மிக அதிகம்.
  • “பெண் வெறுப்புக் கொலை”  என்று அழைக்கப்படும் இந்தக் குற்றத்தில் கடந்த பல ஆண்டுகளாக குறையவே இல்லை என ஐ.நா. கடுமையாக விமர்சித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *