பூச்சோங்கில் ஆடவரை அரிவாளால் வெட்டிய மூவர்! – காவல்துறை விசாரணை!

top-news

மே 24,

பூச்சோங்கில் கும்பல் ஒன்று ஆடவர் ஒருவரைப் பாராங் கத்தியால் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாராங் கத்தியுடன் இருந்த மூவரைக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக SUBANG JAYA மாவட்டக் காவல் ஆணையர் Mohd Fairus Jaafar தெரிவித்தார். பாராங் கத்தியால் வெட்டப்பட்ட 47 வயது உள்ளூர் ஆடவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட ஆடவரைத் தாக்கியது தனது முன்னாள் கணவர் என உள்ளூர் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளதாக Mohd Fairus Jaafar தெரிவித்தார்.

இச்சம்பவம் பூச்சோங்கில் உள்ள Puchong Intan அடுக்குமாடிக் குடியுருப்பில் அதிகாலை 2.15 மணிக்கு நிகழ்ந்ததாகவும் சம்பவம் தொடர்பானக் காணொலிகளையோ புகைப்படங்களையோ பொதுவில் பகிர வேண்டாம் என்றும் SUBANG JAYA மாவட்டக் காவல் ஆணையர் Mohd Fairus Jaafar கேட்டுக் கொண்டார். பாதிக்கப்பட்ட 47 வயது உள்ளூர் ஆடவர் தலையிலும் உடலிலும் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளான நிலையில் SULTAN IDRIS SHAH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவாதகவும் சம்பவத்தில் ஈடுப்ட்ட 3 உள்ளூர் ஆடவர்களைக் காவல்துறையினர் தேடி வருவதாகவும் SUBANG JAYA மாவட்டக் காவல் ஆணையர் Mohd Fairus Jaafar தெரிவித்தார்.

Tiga lelaki dikenal pasti terlibat dalam serangan parang terhadap seorang lelaki tempatan berusia 47 tahun di Puchong Intan. Mangsa cedera parah dan dirawat di hospital. Polis masih mengesan suspek dan menasihatkan orang ramai agar tidak menyebar video kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *