போதைப்பொருள் பயன்படுத்திய 6 பெண்கள் உட்பட 121 பேர் கைது! – சிலாங்கூர்!

top-news

ஜூலை 3,


சிலாங்கூர் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையில் 121 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக சிலாங்கூர் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இயக்குநர் Nazir Mohamad தெரிவித்தார். சிலாங்கூரின் பெட்டாலிங், கிள்ளான், கோலா சிலாங்கூர் ஆகிய 3 மாவட்டங்களில் கடந்த திங்கள் முதல் புதன் வரையில் இச்சோதனையை மேற்கொண்டதாக Nazir Mohamad தெரிவித்தார். சிலாங்கூரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாக Nazir Mohamad தெரிவித்தார். 

கைது செய்யப்பட்டிருக்கும் 121 பேரில் 6 பெண்கள் என்றும் HEROIN, SYABU, GANJA, OPIATE, METHAMPHETAMINE ஆகிய போதைப்பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக சிலாங்கூர் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இயக்குநர் Nazir Mohamad தெரிவித்தார்.கைது செய்யப்பட்டவர்களில் 64 பேர் 19 முதல் 40 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் 31 பேர் 41 வயது முதல் 50 வயதுடையவர்கள் என்றும் 17 பேர் 51 முதல் 60 வயதினர் என்றும் ஒருவர் 18 வயதுக்குற்பட்டவர் என்றும் சிலாங்கூர் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இயக்குநர் Nazir Mohamad தெரிவித்தார்.


Seramai 121 individu termasuk 6 wanita ditahan dalam operasi Bahagian Siasatan Jenayah Narkotik Selangor di Petaling, Klang dan Kuala Selangor. Pelbagai jenis dadah seperti heroin, syabu dan ganja turut dirampas. Suspek berumur antara 18 hingga 60 tahun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *