செர்டாங் ஆற்றங்கரை ஓரத்தில் பெண்ணின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டது!
- Thinagaren Sanggaren
- 31 Oct, 2025
அக்தோபர் 31,
செர்டாங்கில் உள்ள Blue Water Estate ஆற்றங்கரை ஓரத்தில் பெண்ணின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டது. நேற்று பிற்பகல் 3.45 மணிக்குச் செர்டாங் காவல் நிலையத்திற்குப் பொதுமக்களிடமிருந்து புகார் அழைப்புப் பெற்றதும் சம்பவ இடத்திற்குக் காவல் அதிகாரிகளுடன் விரைந்ததாகச் செர்டாங் மாவட்டக் காவல் ஆணையர் Muhamad Farid Ahmad தெரிவித்தார். நிர்வாணமாகக் கிடந்த பெண்ணின் சடலம் குறித்தான புகைப்படங்களைப் பகிர வேண்டாம் என செர்டாங் மாவட்டக் காவல் ஆணையர் Muhamad Farid Ahmad கேட்டுக்கொண்டார்.
மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை செர்டாங் மாவட்டக் காவல் ஆணையர் Muhamad Farid Ahmad வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர் சுமார் 144 செண்டி மீட்டர் உயரம், தோள்பட்டை அளவுக்கு முடியின் நீளம், நீண்ட விரல் நகங்கள், இரு காதுகளிலும் வெள்ளி காதணிகள் அணிந்திருப்பதாகச் செர்டாங் மாவட்டக் காவல் ஆணையர் Muhamad Farid Ahmad அடையாளப்படுத்தினார். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத Blue Water Estate ஆற்றங்கரையிலிருந்து சடலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டதாகவும் சந்தேகத்திற்குரிய நபர்களிடமிருந்து பொதுமக்கள் விலகியிருக்கும்படியும் செர்டாங் மாவட்டக் காவல் ஆணையர் Muhamad Farid Ahmad வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



