அம்னோ பேராளர் மாநாட்டில் கைரி ஜமலூடின்

top-news

கோலாலம்பூர், ஜன. 15-

கைரி ஜமலூடின்,  அம்னோ பேராளர் மாநாட்டில் (Perhimpunan Agung UMNO 2025) கலந்து கொண்டது, அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளையும் ஊகங்களையும் எழுப்பியுள்ளது. குறிப்பாக, முன்னாள் அம்னோ இளைஞர் பிரிவு  தலைவரான அவர் மீண்டும் கட்சியில்  இணைவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

எனினும், கைரி ஜமாலூடின், மாநாட்டிற்கு  தமது வருகை வெறும் “பார்வையாளர்” என்ற நிலைப்பாட்டிலேயே எனத் தெளிவுபடுத்தினார். இன்று நடைபெறும் அம்னோ பேராளர் மாநாட்டில்  உரையாற்றவோ, அரசியல் முடிவுகளில் ஈடுபடவோ தாம் வரவில்லை என்றும் அவர் கூறினார். தற்போதைய சூழலை கவனித்து, கட்சியின் போக்கையும், விவாதங்களையும் நேரில் காணவே தாம் வந்ததாக அவர் விளக்கினார்.

இதற்கிடையில், “அம்னோவில்  மீண்டும் சேர்வதற்கான முதல் படியா உங்கள் வருகை?” என ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது, கைய்ரி அதற்கு அவசரப்பட வேண்டாம் என்ற வகையில் பதிலளித்தார். “ஆம்… ஒவ்வொரு படியாக  முன்னேற வேண்டும் என்று புன்முறுவல் பூத்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *