ஜூலை 2 முதல் டோஹாவிற்கு MAS சேவை தொடங்கும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,ஏப் 30: சர்வதேச விமான நிறுவனங்களுக்காக கத்தார் தனது வான்வெளியை மீண்டும் திறந்ததைத் தொடர்ந்தும், ஹமாத் சர்வதேச விமான நிலையத்தில் செயல்பாடுகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டதையடுத்தும், மலேசியா ஏர்லைன்ஸ் ஜூலை 2 முதல் தோஹாவிற்கு வரையறுக்கப்பட்ட சேவைகளை மீண்டும் தொடங்கும் என்று மலேசியா ஏவியேஷன் குரூப் (MAG) தெரிவித்துள்ளது.

செயல்பாட்டுத் தயார்நிலையை உறுதிப்படுத்தும் வகையில், கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (QCAA) விமானிகளுக்கு வெளியிட்ட அறிவிப்பை (Notam) தொடர்ந்து, செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் ஆரம்பத்தில் ஒரு தினசரி சேவைக்கு (விமானம் MH160/161) மட்டுமே வரையறுக்கப்படும் என்றும், மீதமுள்ள சேவைகள் (MH164/165 மற்றும் MH168/169) தொடர்ச்சியான ஆய்வுக்கு உட்பட்டு, அக்டோபர் 24 வரை இடைநிறுத்தப்படும் என்றும் MAG கூறியது.

முழுமையாகச் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு, விமான நிறுவனம் தொடர்ச்சியான இடர் மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய அறிவிப்புகள் (Notams) மூலம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அது கூறியது.

மேலும், குழுமத்தின் ஹஜ் மற்றும் உம்ரா புனிதப் பயணப் பிரிவான 'அமல் பை மலேசியா ஏர்லைன்ஸ்', திட்டமிட்டபடி ஜித்தா மற்றும் மதீனாவிற்கு விமானங்களை இயக்குகிறது என்றும், இரண்டு கட்டங்களாக 110 விமானங்கள் மூலம் 15,620 யாத்ரீகர்கள் பயணிக்கின்றனர் என்றும் MAG கூறியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *