Setia Indah துப்பாக்கிச் சூட்டின் பின்னனி! வெளிநாட்டவர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 17,

உணவகத்தின் வாசலில் ஆடவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக வெளிநாட்டு ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தென் ஜொகூர் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார். நேற்று மாலை 4.30 மணியளவில் அச்சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைக்காக 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகத் தென் ஜொகூர் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.


கடந்த ஜனவரி 8, ஜொகூரின் Taman Setia Indah உணவகத்தில் 40 வயது உள்ளூர் ஆடவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 36 முதல் 66 வயதுள்ள 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டதாகவும் அவர்களிடமிருந்தள பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தற்போது 64 வயது வெளிநாட்டு ஆடவரைக் கைது செய்திருப்பதாகவும் தென் ஜொகூர் காவல் ஆணையர் Raub Selamat விளக்கமளித்தார். இக்கைது நடவடிக்கையின் போது 2 துப்பாக்கிகள், போதைப்பொருள்கள், துப்பாக்கித் தோட்டாக்கள் என கெலையில் சம்மந்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தென் ஜொகூர் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *