ஷா அலாமில் மீண்டும் வெள்ளம்! 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு!
- Thinagaren Sanggaren
- 24 Nov, 2025
நவம்பர் 24,
இன்று காலை முதல் ஷா அலாம் ஸ்ரீ மூடா பகுதியில் வெள்ள நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ஷா அலாம் குடியிருப்புவாசிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என ஷா அலாம் நகராண்மைக் கழகம் வலியுறுத்தியுள்ளது. ஷா அலாம் அருகிலுள்ள SUNGAI KLANG ஆற்றின் நீர் மட்டம் இன்று அதிகாலை உயர்ந்ததும் நீர் பாசனங்களை வெளியேற்றும் நடவடிக்கையை அதிகாலை 5 மணிக்குத் தொடங்கிய நிலையில் தொடர் மழையால் வெள்ள நீர் ஸ்ரீ மூடா குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷா அலாம் SEKSYEN 35, ஷா அலாம் SEKSYEN U14, SEKSYEN U17, SEKSYEN 13, SEKSYEN 25, SEKSYEN U2, SEKSYEN 19, SEKSYEN 16, SEKSYEN 25, SEKSYEN 23 என ஷா அலாமைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வரையில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வெள்ள அபாயம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஷா அலாம் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
தற்காலிகமாக ஸ்ரீ மூடா சாலைகள் மூடப்பட்டிருப்பதாகவும் கனரக வாகனங்களை மட்டுமே அனுமதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் குடியிருப்புவாசிகள் அவசரத் தேவைகளுக்கு ஷா அலாம் நகராண்மைக் கழகத்தை 03 5510 5811 எனும் 24 மணிநேரச் சேவை தொடர்பு எண்ணின் மூலமாகத் தொடர்புக் கொள்ளும்படி ஷா அலாம் நகராண்மைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



