ஷம்சுல் இஸ்கந்தர் மீது ஊழல் குற்றச்சாட்டு!
- Tamil Malar (Reporter)
- 04 Dec, 2025
செய்தி - வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், டிச. 4-
மலேசிய முன்னாள் பிரதமரின் மூத்த அரசியல் செயலாளரான டத்தோ ஸ்ரீ ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின் (51), சபாவில் கனிம வள ஆய்வு உரிமம் வழங்கியதற்காக மொத்தம் ரிங்கிட் 176,829.03 லஞ்சம் பெற்றதாக நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பிரகாசமான வண்ண பாத்தேக் சட்டையும் கருப்பு நிற பேன்டும் அணிந்து வந்த ஷம்சுல் இஸ்கந்தர், நீதிமன்ற நடவடிக்கைகள் முழுவதும் அமைதியாகவே இருந்தார். நான்கு குற்றச்சாட்டுகளும் நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் மொழிபெயர்ப்பாளரால் வாசிக்கப்பட்டதும், “புரிகிறது திருவிளை, குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை, விசாரணை கோருகிறேன்” என்று தெளிவாக பதிலளித்தார்.
முதல் குற்றச்சாட்டின்படி, பிரதமரின் மூத்த அரசியல் செயலாளராக மலேசிய அரசின் ஊழியராக இருந்த அவர், தொழிலதிபர் டெய் ஜியான் செங் என்பவரிடமிருந்து ரிங்கிட் 100,000 பண லஞ்சத்தை தனது அதிகாரப்பூர்வ பணிகளுக்கு உதவியாக ஏற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மீதமுள்ள மூன்று குற்றச்சாட்டுகளும் அதே திட்டத்துடன் தொடர்புடையவை எனத் தெரிகிறது. வழக்கு விசாரணை தொடர்கிறது. ஷாம்சுல் இஸ்கந்தர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



