மியன்மாரில் ஜோ லோ பதுங்கியுள்ளாரா? போலீசாரிடம் தகவலேதும் இல்லை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 23-

தேடப்பட்டு வரும் வர்த்தகர் லோவ் தைய்க் ஜோ அல்லது ஜோ லோ, மியன்மாரில் எங்கு தலைமறைவாக ஒளிந்திருக்கின்றார் என்பது குறித்து போலீசாரிடம் எந்த ஒரு தகவலும் இல்லை.1எம்டிபி ஊழல் வழக்கில் முக்கிய நபராக விளங்கும், தப்பியோடிய ஜோ லோ குறித்த எந்த தகவலையும், ஜுந்தா ராணுவத் தலைமையிலான மியன்மார் போலீசார் மலேசிய போலீசாரிடம் வழங்கவில்லை என்று, தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரஸாருடின் உசேன் தெரிவித்தார்.

“எங்களிடம் இருக்கும் எந்த ஒரு தகவலையும் மியன்மாரிடம் நாங்கள் வழங்குவோம்” என்று, கோலாலம்பூரில் உள்ள போலீஸ் பயிற்சிக் கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் ரஸாருடின் தெரிவித்தார். “ஆசியான்போலில்(ஆசியான் போலீஸ்) மியன்மார் போலீசாரும் இடம் பெற்றிருப்பதால், நாங்கள் கோரும் எந்த தகவல்களையும் அவர்கள் எங்களுக்கு வழங்குவார்கள். இதுவரையில்,இது குறித்து நாங்கள் எந்த ஒரு தகவலையும் கொண்டிருக்கவில்லை. மியன்மார் எங்களிடம் எந்தத் தகவலையும் வழங்கவும் இல்லை” என்று ஐஜிபி கூறினார்.

ஜோ லோ மியன்மாரில் ஒளிந்திருப்பதாக தாம் நம்புவதாக, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் டான் ஸ்ரீ ஷஃபி அப்துல்லா கடந்த செவ்வாய்க்கிழமை கூறியிருந்தார்.1எம்டிபியின் முன்னாள் வழக்கறிஞர் ஜஸ்மின் லூ, நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த சாட்சியங்களை அடிப்படையாக வைத்து தாம் இம்முடிவுக்கு வந்திருப்பதாகவும் ஷஃபி கூறியிருந்தார்.

1எம்டிபியில் எந்த ஒரு பதவியையும் வகிக்காவிட்டாலும், அரசு சார்ந்த நிறுவனமான 1எம்டிபி எவ்வாறு தனது முதலீடுகளை செய்வது என்பதை தீர்மானிப்பதில், ஜோ லோ “பொம்மை மாஸ்டராக' செயல்பட்டார் என்று கடந்த மே மாதத்தில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நஜிப்பின் லஞ்ச ஊழல் விசாரணையில், ஷஃபி செய்திருந்த குறுக்கு விசாரணையின்போது, மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) விசாரணை அதிகாரி நூர் அய்டா அஃரிப்பினிடமிருந்து பெற்றப்பட்டிருந்த சாட்சியங்கள்படி இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2009ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 1எம்டிபி நிறுவனத்திலிருந்து மொத்தம் 450 கோடி அமெரிக்க டாலர் மீட்கப்பட்டிருந்ததாக, மலேசிய மற்றும் அமெரிக்க விசாரணையாளர்கள் கணித்திருக்கின்றனர். இதனிடையே, மேலும் செயலூக்கத்துடன் செயல்படுமாறு புக்கிட் அமானின் நேர்மை மற்றும் தரநிலைகள் இணக்கத் துறைக்கு (ஜிபிஎஸ்) தாம் உத்தரவிட்டிருப்பதாக ரஸாருடின் தெரிவித்தார்.

“கடந்த காலங்களில், விசாரணை செய்வதற்கு முன்னர் ஒரு சம்பவத்திற்காக ஜிபிஎஸ் அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் இப்போது, ஒரு தவறான நடத்தையில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்த ஓர் அதிகாரி அல்லது பணியாளரையும் ஜிபிஎஸ்சினால் விசாரிக்க முடியும்” என்று மேலும் அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *