DAP அக்மால் உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும்! - DAP மாநில இளைஞர் பிரிவு கோரிக்கை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 16: தேசியக் கொடி பிரச்னை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருவதால், அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மால் சலேவுடனான அனைத்து உறவுகளையும் கட்சி துண்டிக்க வேண்டும் என்று மேலும் ஒரு  டிஏபி மாநில இளைஞர் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

மலேசியர்களிடையே பிளவை விதைத்து கொடி பிரச்சினையை அரசியலாக்குவதாக குற்றம் சாட்டிய அக்மால் மீது மத்திய டிஏபி தலைமையும் இளைஞர் பிரிவும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று நெகிரி செம்பிலான் டிஏபி இளைஞர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அக்மால் போன்ற பொறுப்பற்ற அரசியல்வாதிகளுடனான அனைத்து அரசியல் உறவுகளையும் துண்டித்து தெளிவான நிலைப்பாட்டை எடுக்குமாறு தேசிய டிஏபி மற்றும் டிஏபி இளைஞர் தலைமையை தாங்கள் வலியுறுத்துவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அக்மால் அந்த அச்சுறுத்துலைக் கேலி செய்திருப்பதோடு, தம்முடனான உறவுகளை துண்டிப்பது என்பது ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய பங்காளியான அம்னோவுடனான டிஏபியின் உறவை தற்செயலாக முடிவுக்குக் கொண்டுவருவதாகும் என்று கூறினார்.

மேலும், அதைத் தொடருங்கள் என்று அவர் கூறியிருந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *