பொதுத் தேர்தலுக்கு முன்னரே பெரிக்காத்தானை பாஸ் தன்வசமாக்கிக் கொள்ள வேண்டும் -தீர்மானம் நிறைவேறியது!

top-news
FREE WEBSITE AD

அலோர்ஸ்டார், செப். 17 -

நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன்னரே பெரிக்காத்தான் நேஷனலை தன் வசம் எடுத்துக் கொள்வது என்ற ஒரு தீர்மானத்தை, ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்த பாஸ் கட்சியின் பொதுப் பேரவையில் அதன் பேராளர்கள் ஏகமனதாக நிறைவேற்றி இருக்கின்றனர்.

எதிர்க்கட்சிக் கூட்டணி காலாவதியான மற்றும் ஒரு தெளிவான திசையைக் கொண்டிருக்காத ஒன்றாகப் பார்க்கப்படுவதால், பெரிக்காத்தானின் தலைமைத்துவத்தை பாஸ் அவசியம் தன்வசமாக்கிக் கொள்ள வேண்டும் என்று, அத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசியபோது இளைஞர் பிரிவைச் சேர்ந்த முஹமட் ஃபைஸுடின் கூறியிருந்தார்.

"சமூகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து நாங்கள் பேசியதோடு, நமது நாட்டை எப்படி பாதுகாப்பது என்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். ஆனால், 16ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாம் அவசியம் பாதுகாக்க வேண்டிய ஒரு விவகாரத்தை நாம் மறந்துவிடக் கூடாது. "பெரிக்காத்தான் நேஷனலை நாம் கைப்பற்றுவதற்காகவும் கூட்டணியின் போராட்டங்களை மேலோங்கச் செய்ய நாம் எழுந்திருப்பதை காணவும் மக்கள் தற்போது காத்திருக்கின்றனர்.

பெரிக்காத்தானை ஒரு சோம்பலான, காலாவதியான, தெளிவான திசையைக் கொண்டிருக்காத மற்றும் கவனத்தை இழந்திருக்கும் ஒரு கூட்டணியாகவே மக்கள் இன்று பார்க்கின்றனர்” என்று அவர் கூறினார்.பெரிக்காத்தானின் பிரதமர் வேட்பாளர் 70 வயதுக்குக் கீழ்ப்பட்டவராக இருக்க வேண்டும் என்ற கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் அறிக்கை குறித்து கருத்துரைத்த ஃபைஸுடின், பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே பிரதமர் பதவியை வகிக்க முடியும் என்ற சமிக்ஞையை அது எடுத்துரைப்பதாகக் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *