ஊழலுக்கு இடமில்லை: எல்லை பாதுகாப்பு அதிகாரிகளை நேர்மையுடன் செயல்பட வலியுறுத்தும் சுஹாய்லி
- Tamil Malar (Reporter)
- 20 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 20-
பணியில் ஈடுபடும் போது ஊழல் போன்ற தவறான செயல்களிலிருந்து தமது அதிகாரிகள் முழுமையாக விலகி நிற்க வேண்டும் என்ற உறுதியுடன் மலேசிய எல்லை கட்டுப்பாடு, பாதுகாப்பு முகமை (AKPS) செயல்பட்டு வருவதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகம்மது சுஹாய்லி முகம்மது ஸைன் தெரிவித்தார்.
இந்த உறுதி, நாடாளுமன்ற 15-ஆவது கூட்டத் தொடரின் ஐந்தாவது அமர்வின் முதல் கூட்டத் தொடக்க விழாவில், அரச பாதுகாப்பு, அமலாக்க அமைப்புகளில் காணப்படும் ஊழல் பிரச்சினைகள் குறித்து மாமன்னர் வெளியிட்ட அரச உரையைத் தொடர்ந்து வெளிப்பட்டதாக அவர் கூறினார்.
“எங்களது பணித்துறை இயல்பாகவே பல்வேறு சவால்களையும் சோதனைகளையும் சந்திக்கிறது. ஊழல் அபாயம் எங்களைத் தொடக்கூடியது என்பதை நான் மறுக்கவில்லை. இருப்பினும், என் அதிகாரிகள் நேர்மையையும் ஒழுக்கத்தையும் கைவிடாமல் பணியாற்ற வேண்டும் என்பதையே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்,” என அவர் கூறினார்.
எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டின் முதல் பாதுகாப்புக் கேடயமாகச் செயல்படுவதாகவும், அவர்களின் நேர்மை மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் முக்கியக் காரணி எனவும் அவர் விளக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



