டாக்டர் முகமது புவாட் தொடர்பான விசாரணை தொடர்கிறது – ஜொகூர் போலீஸ்

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஜூலை 7 –

டத்தோ டாக்டர் முகமது புவாட் சர்காஷி, மாநில சட்டப்பேரவை கலைப்பு மற்றும் 16-ஆவது மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அரச குடும்பத்தைத் தொடர்புபடுத்தி வெளியிட்ட கருத்துகள் குறித்து நடைபெற்று வரும் விசாரணை இன்னும் தொடர்வதாக ஜொகூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாட் கூறுகையில், விசாரணை இன்னும் நிறைவடையாததால், இந்த வழக்கு தொடர்பாக தற்போது விரிவான கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

“இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. விசாரணை அறிக்கையை முழுமையாக்குவதற்கு பல அம்சங்களை இன்னும் ஆராய வேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது,” என்று அவர் கூறினார்.

ஜொகூர் காவல்துறை தலைமையகத்தில் உள்ள கூட்டாட்சி ரிசர்வ் படை (PSP) எண் 2 வளாகத்தில் முன்கூட்டிய வாக்குப்பதிவில் தனது வாக்கை பதிவு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *