இஸ்மாயில் சப்ரியிடம் 20 மணிநேரம் MACC விசாரணை! நாளை மீண்டும் தொடரும்!

top-news

மார்ச் 19,

முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob எதிரானச் சொத்துக்குவிப்பு கள்ளப் பணப்பரிவர்த்தனைத் தொடர்பான விசாரணையை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM நடத்தி வரும் நிலையில் நாளை மீண்டும் விசாரணையைத் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 20 மணிநேரங்கள் Datuk Seri Ismail Sabri Yaakob விசாரிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளை மீண்டும் விசாரணையை மேற்கொள்வதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 9.57 மணிக்கு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை அலுவலகம் வந்த Datuk Seri Ismail Sabri Yaakob, மாலை 4.35 மணிக்கு விசாரணை முடிந்து வெளியேறினார். இன்று சுமார் 6 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்னும் பல்வேறு சந்தேககங்களை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் கொண்டிருப்பதாகவும் நாளையும் Datuk Seri Ismail Sabri Yaakob விசாரணைக்காக அழைக்கப்படுவார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Bekas Perdana Menteri, Datuk Seri Ismail Sabri Yaakob telah disoal siasat selama 20 jam oleh SPRM berhubung siasatan pemilikan harta dan transaksi wang haram. Sesi siasatan yang berlangsung selama enam jam hari ini akan diteruskan lagi esok.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *