எந்த அரசியல் தலைவரின் உத்தரவின் பேரிலும் நாங்கள் செயல்படவில்லை - மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
- Tamil Malar (Reporter)
- 08 Dec, 2025
செய்தி- வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், டிச. 8-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) தங்களது விசாரணைகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்ற குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்துள்ளது. அனைத்து விசாரணைகளும் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு, கண்டிப்பாகவும் நடுநிலையாகவும் நடத்தப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
SPRM-இன் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறுகையில், “எந்த அரசியல் தலைவரின் உத்தரவின் பேரிலும் நாங்கள் செயல்படவில்லை. எங்கள் நேர்மையை ஒருபோதும் தியாகம் செய்ய மாட்டோம். தனிப்பட்ட நபரோ கட்சியோ எதுவாக இருந்தாலும், நாங்கள் முற்றிலும் வெளிப்படையாகவும் சார்பு இல்லாமலும் சட்டப்படி விசாரணை நடத்துகிறோம்” என்றார்.
“அரசியல் உத்தரவின் பேரில் SPRM விசாரணை நடத்துகிறது என்ற குற்றச்சாட்டை நான் முழுமையாக மறுக்கிறேன்” என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
SPRM தொடர்ந்து தனது சுயாதீனத்தன்மையையும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையையும் உறுதியாக பின்பற்றி வருவதாக உறுதியளித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



