பந்திங் புயலால் 9 மாணவர்கள் காயம்! - BOMBA SELANGOR
- Thinagaren Sanggaren
- 16 Oct, 2025
அக்தோபர் 16,
நேற்று மாலை சிலாங்கூர் பந்திங்கில் உள்ள Sijangkang பகுதியில் ஏற்பட்ட கடுமையான புயலில் 9 மாணவர்கள் உட்பட 51 வயது பெண் ஒருவர் காயமடைந்திருப்பதாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். கடுமையான மழையுடன் கூடிய புயலால் Sjingkang-இல் பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்புப் படையினருடன் மீட்பு ஆணைய அதிகாரிகளும் செயல்பட்டதாகவும் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
நேற்று மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய மீட்புப் பணி இரவு 8.40 வரையில் நீடித்ததாகச் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். கடுமையான புயலால் வளாககங்களில் மேல் கூரைகள் சரிந்து குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததால் இதுவரையில் மொத்தம் 10 பேர் காயமடைந்திருப்பதாகவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர்களன வீடு திரும்பியதாகவும் சிலாங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். இதுவரையில் எந்தவோர் உயிரிழப்பும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



