லிம் எனக்கு நெருக்குதல் கொடுக்கிறாரா? எந்த தலைவராலும் என்னை கட்டுப்படுத்த முடியாது! - அந்தோணி லோக்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 16: DAP தலைவர்‌  லிம்‌ குவான்‌ எங்‌தம்‌ மீது ஆதிக்கம்‌ செலுத்தி வருவதாகக்‌ கூறப்படுவதை அக்கட்சியின் தலைமைச்‌ செயலாளர்‌ அந்தோணி லோக் மறுத்துள்ளார்‌. குவான்‌ எங்கிற்கு எதிரான அத்தகைய வதந்தி நியாயமற்றது என்றும்‌ லோக்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

இதற்கு முன்னர்‌ கட்சியில்‌ தாங்கள்‌ இருவரும்‌. வெவ்வேறு பதவிகளை வகித்தபோது, குவான்‌ எங்கிடமிருந்து தாம்‌ எந்த ஒரு நெருக்குதலையும்‌ எதிர்நோக்கியதில்லை என்று, மலேசியாகினியுடான “போட்காஸ்ட்‌ இணைய பேட்டியில்‌ லோக்‌ வலியுறுத்திக்‌ கூறியுள்ளார்‌. 

கடந்த 2022ஆம்‌ ஆண்டில்‌, குவான்‌ எங்‌ தலைவராகவும்‌ லோக்‌ தலைமைச்‌ செயலாளராகவும்‌ நியமிக்கப்பட்டனர்‌. அதற்கு முன்னர்‌, பத்து ஆண்டுகளுக்கு லோக்‌ ஜசெகவின்‌ தேசிய ஏற்பாட்டுக்‌. குழு தலைமைச்‌ செயலாளராகவும்‌ குவான்‌ எங்‌ தலைமைச்‌ செயலாளராகவும்‌ பதவி வகித்தனர்‌. 

“எனக்கென்று சொந்த தலைமைத்துவ கருத்துகளையும்‌ பாணியையும்‌ நான்‌ கொண்டிருக்கின்றேன்‌. காரியங்களைச்‌ செய்வதிலும்‌ நான்‌ எனது சொந்த வழியைக்‌ கொண்டிருக்கின்றேன்‌. ஒரு தலைவராலும்‌ என்னைக்‌ கட்டுப்படுத்த முடியாது என்று, கட்சி நிர்வாகத்தில்‌ குவான்‌ எங்‌ தலையிடுவதாக பரப்பப்பட்டு வரும்‌ வதந்தி குறித்து கேட்டபோது, லோக்‌. தெரிவித்தார்‌. 

பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர்‌, தேர்தல்‌ வியூகம்‌ போன்ற எந்த ஒரு முக்கிய முடிவுகளையும்‌ கட்சியின்‌ மத்தியக்‌ குழுவுடன்‌. கலந்து பேச வேண்டியிருக்கிறது என்றும்‌ அவர்‌ கூறினார்.

”குவானுக்கு எதிரான இத்தகைய வதந்திகள்‌ நியாயமற்றவை. அவர்‌ தலைமைச்‌ செயலாளராக இருந்தபோது, எந்த விசயத்திலும்‌ அவர்‌ தன்னிச்சையாக முடிவு எடுத்ததில்லை. கட்சியின்‌ இதர தலைவர்களுடன்‌ அவர்‌ கலந்து பேச வேண்டியிருந்தது ' என்று போக்குவரத்து அமைச்சருமான லோக்‌ கூறினார்‌. 

தமது முன்னோடியுடனான தமது உறவு பல ஆண்டுகளாக மாறியுள்ள நிலையில்‌, கட்சித்‌ தலைமைச்‌ செயலாளர்‌ எனும்‌ முறையில்‌, பாகான்‌ நாடாளுமன்ற உறுப்பினருமான குவான்‌ எங்‌ தம்‌ மீது மிகுந்த மரியாதையை வைத்திருப்பதாக தாம்‌ நம்புவதாக, சிரம்பான்‌ நாடாளுமன்ற உறுப்பினருமான லோக்‌ ஒப்புக்‌ கொண்டார்‌. 

“தலைமைச்‌ செயலாளர்‌ எனும்‌ முறையில்‌ என்னை அவர்‌ மதிக்கின்றார்‌. என்னை அவர்‌ பார்க்கும்‌ போதெல்லாம்‌ 'எஸ்ஜி' அதாவது 'தலைமைச்‌ செயலாளரே' என்றுதான்‌ அழைப்பார்‌. இத்தகைய புரிந்துணர்வை அனைவரும்‌ பின்பற்றி வந்தால்‌, எந்த ஒரு பெரிய பிரச்சினையும்‌ எழாது.  “கட்சியின்‌ அடுத்த தேர்தலில்‌ தாம்‌ மீண்டும்‌ தலைமைச்‌ செயலாளராக நியமிக்கப்படுவேன்‌ என்று  எதிர்பார்க்கின்றேன்‌ என்றும்‌ அப்பேட்டியில்‌ லோக்‌ தெரிவித்தார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *