இணைய மோசடியில் ஈடுபடும் கும்பல் கைது!

- Sangeetha K Loganathan
- 19 Mar, 2025
மார்ச் 19,
போலி வேலை வாய்ப்பு, போலி முதலீடுகளைக் கொண்டு மோசடி செய்யும் கும்பல் நேற்று சிலாங்கூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசிய வணிகக் குற்றப்புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் Datuk Seri Ramli Mohamed Yoosuf தெரிவித்தார்.
வெளிநாட்டினர்களைக் குறிவைத்து போலி முதலீடுகளை உருவாக்கி அவர்களைச் சிக்க வைக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சோதனை நடவடிக்கையின் போது அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்த 5 உள்ளூர் ஆண்களும் 2 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 36 வயதுள்ளவர்கள் என்றும் அவர்களிடமிருந்து இணைய மோசடிக்காகப் பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்பச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Polis menahan tujuh individu berusia 22 hingga 36 tahun di sebuah pangsapuri di Selangor kerana disyaki menjalankan penipuan dalam talian melibatkan pekerjaan dan pelaburan palsu. Mereka menyasarkan warga asing dan pelbagai peralatan teknologi untuk penipuan turut dirampas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *