போலி மருத்துவச் சான்றிதழைத் தயாரிக்கும் கும்பல் கைது!

top-news

ஜூலை 7,


அரசு ஊழியர்களுக்குப் போலி மருத்துவ விடுப்புச் சான்றிதழ்களைத் தயாரித்து வழங்கும் கும்பலைச் சேர்ந்த மூவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. நேற்று சுங்கை பெட்டாணியில் உள்ள வணிகக் கடையில் சந்தேகத்திற்குரிய கடையைச் சோதனையிட்டதில் 40 வயதுடைய ஆடவரும் 30 வயதுடைய இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.

கடந்த மாதத்தில் காவல் அதிகாரி ஒருவர் அரசு மருத்துவமனையின் விடுப்புச் சான்றிதழை வழங்கிய போது அது போலியான மருத்துவ விடுப்புச் சான்றிதழ் என கண்டறியப்பட்டதாகவும் அதன் தொடர்ச்சியாக இந்த மூவரும் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார். ஒரு நாள் மருத்துவ விடுப்பிற்குத் தலா RM25 முதல் RM30 வரையில் கட்டணமாகப் பெற்றுவதாகவும் இந்த கும்பல் சுமார் 3 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருவதாகவும் Kuala Muda மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.


Polis menahan tiga individu di Sungai Petani kerana terlibat dalam sindiket menghasilkan sijil cuti sakit palsu untuk kakitangan awam. Sindiket ini beroperasi sejak tiga tahun lalu dan mengenakan caj RM25 hingga RM30 untuk setiap sijil palsu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *