3,910 சிங்கப்பூர் வாகனங்களுக்குச் சம்மன்கள்! RM 11 லட்சம் வருவாய்!
- Thinagaren Sanggaren
- 22 Oct, 2025
அக்தோபர் 22,
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் வாகனங்கள் மீது கடந்த ஜூலை 1 முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மொத்தம் 3,910 சிங்கப்பூர் வாகனங்களுக்குச் சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும் அதன் மொத்த சம்மன் தொகை RM 1,173,000.00 ரிங்கிட் என கணக்கிடப்பட்டிருப்பதாகச் சாலை போக்குவரத்து ஆணையமான JPJ இயக்குநர் Datuk Muhammad Kifli Ma Hassan தெரிவித்தார். கடந்த ஜூலை முதல் வெளிநாட்டு வாகனங்களுக்கு RFID கட்டாயமாக்கப்பட்டதிலிருந்து இந்த சோதனையை நடத்தி வருவதாக Datuk Muhammad Kifli Ma Hassan தெரிவித்தார்.
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் வணிக வாகனங்கள் RFID செயலியைக் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்கிற விதியை மீறிய வணிக வாகனங்களுக்குத் தலா RM 3,000 ரிங்கிட் வரையில் சம்மன் வழங்கப்படும் என்றும் Datuk Muhammad Kifli Ma Hassan தெரிவித்தார். இந்த RFID முறைமை தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் வணிக வாகனங்களும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என Datuk Muhammad Kifli Ma Hassan தெரிவித்தார். கடந்த காலங்களில் வெளிநாட்டு வாகனங்களுக்கு விதிக்கப்படும் சம்மன்கள் வசூலிக்க முடியாத சூழல் நிலவியது. ஆனால் RFID மூலம் சம்மன்களைச் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்கள் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைவதைத் தடுக்க முடியும் என Datuk Muhammad Kifli Ma Hassan தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



