மயாமி ஓபன் பட்டத்தை மீண்டும் வென்றார் சின்னர்
- Surendran Sumdraraj
- 30 Mar, 2026
மயாமி, மார்ச் 30-
உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரர் யானிக் சின்னர், ஜிரி லெஹெக்காவை 6-4, 6-4 என்ற நேரடி செட்களில் வீழ்த்தி ATP மாஸ்டர்ஸ் 1000 மயாமி ஓபன் பட்டத்தை இரண்டாவது முறையாகக் கைப்பற்றினார்.
மழை இடையூறுகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற சின்னர், இதன் மூலம் “சன்ஷைன் டபுள்” எனப்படும் இந்தியன் வெல்ஸ் மற்றும் மயாமி ஓபன் பட்டங்களை ஒரே சீசனில் வென்ற சாதனையைப் படைத்தார்.
2017ஆம் ஆண்டில் ரோஜர் பெடரர் செய்த சாதனையைத் தொடர்ந்து, எந்த ஒரு செட்டையும் இழக்காமல் இந்த இரு முக்கிய ஹார்ட்கோர்ட் போட்டிகளையும் கைப்பற்றிய முதல் ஆண் வீரராக சின்னர் திகழ்கிறார்.
2024ஆம் ஆண்டு மயாமி ஓபனை வென்றிருந்த சின்னர், கடந்த ஆண்டு டோப்பிங் விவகாரத்தால் மூன்று மாதங்கள் தடை செய்யப்பட்டதால் போட்டியில் பங்கேற்கவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டின் பாரிஸ் மாஸ்டர்ஸிலிருந்து தொடங்கி தொடர்ந்து மூன்று மாஸ்டர்ஸ் 1000 பட்டங்களை வென்று தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



