இவ்வளவு நீள ராஜ நாகமா?! மிரண்டுபோன சிவில் பாதுகாப்புப் படை

top-news
FREE WEBSITE AD

பெண்டாங், ஜன 7: மலேசிய சிவில் பாதுகாப்புப் படையினர் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நீளமான ராஜ நாகத்தைப் பிடித்து பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

சிவில் படையில் பணியாற்றிய காலத்திலிருந்து, இவ்வளவு பெரியதும் தாக்குதல் மிகுந்ததுமான ராஜ நாகத்தைப் பிடிப்பது இதுவே முதல் முறை என சிவில் பாதுகாப்புப் படை கார்ப்பரல் முகமது சுக்ரி அகமது தெரிவித்துள்ளார்.

அருகில் சென்று பிடிக்க முயன்ற போது, அரச நாகம் நேரடியாகத் தன்னை பார்த்ததாகவும், தலைக்கவசத்தை (hood) விரிக்காதபோதிலும் நிலைமை மிகுந்த சவாலானதாக இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஒரு சிறிய தவறும் உயிரிழப்புக்கு காரணமாகியிருக்கலாம்  என அவர் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல், பெண்டாங் மாவட்டம், கம்பங் டத்தோ சயீத் அகமது பகுதியில் உள்ள கெடியாமான் மெஸ்ரா ராக்யாட் குடியிருப்பில், பழைய வீட்டின் எஞ்சிய கட்டிடப் பகுதியில் சுமார் நான்கு மீட்டர் நீளமுள்ள ராஜ நாகத்தை அவர்கள் பிடித்தனர்.

அந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் 30 வயதிற்குட்பட்ட ஒருவர், ஜிங்க் கூரையின் கீழ் பாம்பு இருப்பதை கண்டறிந்து தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

அந்த  ராஜ நாகம்  தோல் உரித்திருப்பதால், உடல் தோற்றம் புதிதாகவும் துடிப்புடனும் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெண்டாங் சிவில் பாதுகாப்புக் குழு,  மாலை 6.54 மணிக்குள் மீட்பு நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *