கைரியிடம் இருந்து மேல் முறையீட்டுக் கடிதமா? அது இன்னும் கிடைக்கவில்லை - ஜாஹிட் ஹமிடி
- Shan Siva
- 04 Sep, 2025
புத்ராஜெயா, செப் 4: 2023 ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட பதவி
நீக்கத்திற்கு எதிராக அம்னோவின் இளைஞர் பிரிவு முன்னாள் தலைவர் கைரி
ஜமாலுதீனிடமிருந்து கட்சிக்கு இன்னும் மேல்முறையீட்டு கடிதம் எதுவும்
கிடைக்கவில்லை என்று அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்துள்ளார்
கிராமப்புற
மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் 2026 பட்ஜெட் குறித்து மாநில அளவிலான
பங்குதாரர்களுடன் நடைபெற்ற ஒரு உரையாடல் அமர்வுக்குப் பிறகு செய்தியாளர்களை
சந்தித்தபோது ஜாஹித் இதனைத் தெரிவித்தார்.
சுகாதாரத்துறை
அமைச்சரும் மூன்று முறை ரெம்பாவ் தொகுதியைக் கைப்பற்றிய எம்.பி.யுமான கைரி,
15வது பொதுத் தேர்தலின் போது கட்சி ஒழுக்கத்தை
மீறியதற்காக ஜனவரி 2023 இல் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



