மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் பாகுபாடா? – அன்வார் விளக்கம்மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களில் பாகுபாடா? – அன்வார் விளக்கம்
- Shan Siva
- 28 Aug, 2025
கோலாலம்பூர், ஆக 28: பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்கள் சில மாநிலங்களுக்கு மட்டுமே சாதகமாக உள்ளன என்பதை மறுத்து, ஒதுக்கீடுகள் நியாயமானவை மற்றும் தேவையின் அடிப்படையில் உள்ளன என்று கூறினார்.
ஜொகூர் மற்றும் பினாங்கு
ஆகியவை தங்கள் புதிய ரயில் அமைப்புகளுக்கு கூட்டரசு ஆதரவைப் பெற்றபோது, மற்ற மாநிலங்கள் ஓரங்கட்டப்பட்டதற்கான காரணம்
குறித்து பாரிசான் ஜெலுபு நாடாளுமன்ற உறுப்பினர் ஜலாலுதீன் அலியாஸ் கேட்ட
கேள்விக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
மடானி
கட்டமைப்பின் கீழ் சபா, சரவாக், கிளந்தான் மற்றும் பெர்லிஸ் போன்ற மாநிலங்கள்
வளர்ச்சிச் செலவினங்களில் பெரிய உயர்வைக் கண்டதாக அன்வார் கூறினார்.
மடானி
அரசாங்கத்தில் எந்த மாநிலமும் விடுபடவில்லை என்பதை இது காட்டுகிறது. உண்மையில்,
தேவையின் அடிப்படையில் ஒதுக்கீடுகள்
அதிகரிக்கப்பட்டன என்று அவர்
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கூறினார்.
சபாவின் வளர்ச்சி
பட்ஜெட் 2022 இல் RM5.2 பில்லியனில் இருந்து 2025 இல் RM6.7 பில்லியனாகவும், சரவாக்கின் RM4.7 பில்லியனில்
இருந்து RM5.9 பில்லியனாகவும்
அதிகரித்ததாக அன்வார் கூறினார்.
கிளந்தான் RM2.4 பில்லியனில் இருந்து RM3.2 பில்லியனாகவும், திரெங்கானு RM1.4 பில்லியனில் இருந்து RM1.8 பில்லியனாகவும்,
கெடா RM1.6 பில்லியனில் இருந்து RM2.2 பில்லியனாகவும், பெர்லிஸ் RM400 மில்லியனில்
இருந்து RM600 மில்லியனாகவும்
அதிகரித்துள்ளது.
சபாவில் போர்னியோ
நெடுஞ்சாலை, சரவாக்-சபா இணைப்புச்
சாலை பகாங், கிளந்தான்,
தெரெங்கானு மற்றும் சிலாங்கூர் வழியாகச்
செல்லும் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (போன்ற பல முக்கிய திட்டங்களையும் அன்வார்
பட்டியலிட்டார்.
RM25.08 பில்லியன்
மதிப்புள்ள வெள்ளத் தணிப்புப் பணிகளும் நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில்
RM8.8 பில்லியன் கிளந்தான், பகாங் மற்றும் தெரெங்கானுவுக்குச் சென்றன என்ரு அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



