நீதித்துறையில் தலையீடு இருப்பது உண்மையா? விசாரணை தேவை-நூருல் இஸ்ஸா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 15-

நீதித்துறை பதவி நியமன ஆணையத்தின் (ஜேஏசி) கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் வெளியே கசிந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டியது அவசியம் என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் நேற்று வலியுறுத்தினார்.

நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை கட்டிக் காத்து வருவதை உறுதிசெய்ய அக்குற்றச்சாட்டை வெளிப்படையாக விசாரிக்க வேண்டியது அவசியமாகும் என்று புத்ராஜெயாவில் நேற்று நடைபெற்ற அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் குறிப்பிட்டார்.

நீதித்துறையின் சுதந்திரத்தைத் தற்காக்கும் பொருட்டு மலேசிய வழக்கறிஞர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் அப்பேரணி நடைபெற்றது.போலீஸ் புகார்கள், ஜேஏசி கூட்டக் குறிப்புகள் அம்பலமானதாகக் கூறப்படுவது போன்ற அண்மைய நிகழ்வுகள் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவற்றை நாம் ஒதுக்கித் தள்ளக் கூடாது.

அரசாங்கம், அமைச்சரவை, அரசு நிர்வாகம் போன்றவற்றில் அதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தவிர்க்க வேண்டுமெனில் சுதந்திரமான நீதித்துறை அவசியமாகும். நீதித்துறை, அரசு நிர்வாகம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கிடையே அதிகாரப் பகிர்வும் சரிபார்த்தல் முறையும் இருக்க வேண்டும்
என்றார் அவர்.

இந்த விவகாரத்தை ஆராய்வதற்கு குறைந்தது ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயமொன்று அமைக்கப்பட வேண்டும்.
கூட்டரசு அமைப்புச் சட்டத்தின் 125ஆவது விதி இதனை அனுமதிக்கிறது என்றும் நூருல் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *