‘அன்பே டயானா’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய சிவகார்த்திகேயன்

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 17-

‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனம் பெற்ற பாரி இளவழகன், தற்போது ‘அன்பே டயானா’ திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். ‘குட் நைட்’, ‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் பேமிலி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் ரம்யா ரங்கநாதன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நடிகை ரோஜா மீண்டும் தமிழ்த் திரையுலகில் நடிக்க வந்திருப்பதும் படத்தின் சிறப்பம்சமாகும். இவர்களுடன் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு மற்றும் சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பரத் சங்கர் இசையமைத்துள்ள ‘அன்பே டயானா’, சென்னை பெரம்பூர் பகுதியைப் பின்னணியாகக் கொண்டு குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். படம் சிறப்பாக இருப்பதாகக் கூறிய அவர், ‘அன்பே டயானா’ திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தார். சிவகார்த்திகேயனின் இந்தப் பாராட்டு படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *