அமைச்சரின் அரசியல் செயலாளராக முதல் இந்திய பெண்! G.SIVAMALAR!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 14,

பிரதமர் துறையின் கூட்டரசு அமைச்சருக்கான அரசியல் செயலாளராக வழக்கறிஞர் சிவமலர் கணபதி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டத்தோக் ஸ்ரீ அன்வார் முன்னிலையில் சிவமலர் கணபதி இன்று காலை பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். வழக்கறிஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான சிவமலர் கணபதி சுகாதார அமைச்சருக்கும், கூட்டரசு அமைச்சருக்கும் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அவரின் தொடர் சமூகநலன் நடவடிக்கைகளின் மூலமாக தற்போது கூட்டரசு வளாக அமைச்சர் DATUK SERI ZALIHAவின் அரசியல் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

வரலாற்றில் அமைச்சரின் அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்திய பெண் எனும் சாதனையையும் வழக்கறிஞர் சிவமலர் கணபதி நிகழ்த்தியுள்ளார். அண்மையில் தலைநகரில் இந்தியர்கள் தொடர்பான பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண சிவமலர் கணபதி முக்கிய பங்களித்துள்ளார். MASJID INDIA நில அமிழ்வு, MASJID INDIA கோயில் நில விவகாரம், பிரிக்பீல்ட் தீபாவளி சந்தைகள், என்பன குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *