ஹாங்காங் ஓப்பன் 2025: சிவசங்கரி இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்
- Tamil Malar (Reporter)
- 02 Dec, 2025
செய்தி-வெற்றி மைந்தன்
கோலாலம்பூர், டிச. 2-
மலேசியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, ஹாங்காங் ஓப்பன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் 2025-இல் அபார ஆட்டத்துடன் இரண்டாவது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
ஹாங்காங் ஸ்குவாஷ் மையத்தில் இன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், உலகின் 7-ஆவது இடத்தில் உள்ள சிவசங்கரி, இங்கிலாந்தின் லூசி டர்மலை நேர் செட்களில் 3-0 என்ற கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.
நாளை நடைபெறவுள்ள இரண்டாவது சுற்றில், சிவசங்கரி பிரான்ஸ் வீராங்கனை மெலிசா அல்வேஸை எதிர்கொள்வார். மெலிசா அல்வேஸ், தாயக வீராங்கனை டிசி-விங் டாங்கை 3-0 (11-5, 11-5, 11-3) என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தார்.
செப்டம்பரில் லண்டன் கிளாசிக் அரையிறுதி, எகிப்து ஓப்பன், கத்தார் கிளாசிக் காலிறுதி என தொடர்ச்சியாக சிவசங்கரி சிறப்பாக விளையாடினார். அக்டோபரில் சிலிக்கான் வேலி ஓப்பனில் இரண்டாம் இடம் பிடித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



