தமிழ்ப்பள்ளிகளுக்கு RM 50 மில்லியன் சிறப்பு நிதி! – பிரதமர் அன்வார்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 6,

பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தலைமையிலான மடானி அரசு 2026 கல்வி சிறப்பு நிதித் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கு RM 50 மில்லியன் நிதியை வழங்கியுள்ளது. இது கல்வி அமைச்சுக்கு வழங்கப்பட்ட பட்ஜெட் நிதியுடன் தொடர்புடையதாக அல்லாமல், பிரதமரின் சிறப்பு நிதியிலிருந்து வழங்கப்பட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிகளுக்கு RM 50 மில்லியன் சிறப்பு நிதியும் சீனப் பள்ளிகளுக்கு RM 80 மில்லியன் சிறப்பு நிதியும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு RM 30 மில்லியன் சிறப்பு நிதியைப் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அறிவித்திருந்த நிலையில் தற்போது 20 மில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் முதலாம் ஆண்டு முதல் 6 ஆம் ஆண்டு வரையில் பயிலும் மாணவர்களுக்குத் தலா RM150 ரிங்கிட் வழங்கப்படும் என்றும் இத்திட்டத்திற்கு மொத்தம் RM800 மில்லியனை மடானி அரசு ஒதுக்கியிருப்பதாகவும் பிரதமர் Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *