தெலுக் இந்தான் தமிழ்ப்பள்ளிகளுக்கு RM 1.5 மில்லியன் நிதி! – அமைச்சர் NGA KOR MING!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 5,

வீட்டுவசதி உள்ளாட்சி அமைச்சர் NGA KOR MING தெலுக் இந்தானில் உள்ள 12 தமிழ்ப்பள்ளிக்களுக்கு RM 1.23மில்லியன் நிதியும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு RM 256,600 ரிங்கிட் நிதியும் வழங்கினார். தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து நம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இந்த நிதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான NGA KOR MING தெரிவித்தார். 


RM 1.23மில்லியன் நிதி தெலுக் இந்தானில் உள்ள 12 தமிழ்ப்பள்ளிகளின் நிர்வாகச் செலவீனங்களுக்காக வழங்க்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பாக டத்தோ சிதம்பரம் தமிழ்ப்பள்ளி, உலூ பெர்னாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி, நோவா ஸ்கோட்டியா தமிழ்ப்பள்ளி, நடேசத் தமிழ்ப்பள்ளி, திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஆகியவை அடங்கும் என NGA KOR MING தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள RM 256,600 நிதியானது தெலுக் இந்தானில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி உதவிக்காக வழங்கப்பட்டிருப்பதாகவும் இதன் மூலம் 258 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் NGA KOR MING தெரிவித்தார். இதன் மூலமாக ஒவ்வொரு தமிழ்ப்பள்ளி மாணவருக்கும் தலா 1,000 ரங்கிட் வழங்கப்படுவதாகவும் NGA KOR MING தெரிவித்தார்.



இதன் தொடர்ச்சியாக மடானி அரசாங்கத்தின் மூலமாக வழங்கப்படும் சிறப்பு நிதி உதவித் திட்டங்களிலிருந்து தெலுக் இந்தான் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் விடுபடாமல் இருப்பதைத் தாம உறுதிச் செய்து வருவதாகவும் NGA KOR MING நம்பிக்கை அளித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *