BENTONG தமிழ்ப்பள்ளியிலிருந்து ஒரு தேசிய விளையாட்டாளர் உருவாகுவார்! – Yb Young Syefura நம்பிக்கை!
- Thinagaren Sanggaren
- 11 Aug, 2024
இன்று காலை பெந்தோங் தமிழ்ப்பள்ளியின் 37
ஆவது விளையாட்டுப் போட்டி பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் Young
Syefura Othman தலைமையில் நடைபெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டியைத் தலைமை தாங்கிய
Young
Syefura Othman இந்த மாணவர்கள் உணர்வோடும் உணர்ச்சியோடும் விளையாடுவதைப் பார்க்கும் போது BENTONG
தமிழ்ப்பள்ளியிலிருந்து தேசிய விளையாட்டாளர் ஒருவர் உருவாகுவார் எனும்
நம்பிக்கை தனக்குள் எழுவதாகத் தெரிவித்தார்.
இப்போட்டி விளையாட்டைச் சிறப்பாக ஏற்பாடு
செய்திருந்த பெந்தோங் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருக்கும் ஆசிரியர்களுக்கும் தமது
பாராட்டைப் பகிர்ந்ததுடன், விளையாட்டுத் துறையில் பிள்ளைகளை
ஈடுபடுத்தும் பொறுப்புமிக்க பெற்றோர்களுக்கும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருக்கும்
தனது பாராட்டைத் தெரிவித்தார்.
பெந்தோங் தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டிக்குத்
தலைமையேற்றதற்குப் பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் Young
Syefura Othman அவர்களுக்கும் இப்போட்டி விளையாட்டு சிறப்பாக நடந்தேற
அனைத்து வகையிலும் ஆதரவளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் உளமார்ந்த நன்றியைப் பெந்தோங்
தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் திருமதி. வேணி தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



