புந்தோங் மெத்தடிஸ்ட் தமிழ்ப்பள்ளிக்குப் புதிய தளவாடப் பொருள்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் – THULSI MANOGARAN

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 7,


புந்தோங்கில் உள்ள மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளியில் அடிப்படை தளவாடப் பொருள்கள் பற்றாக்குறையாக இருப்பதை அறிந்து அப்பள்ளிக்குப் புதிய தளவாடப் பொருள்களை வழங்கியதாகப் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் THULSI MANOGARAN தெரிவித்தார். வகுப்பில் மாணவர்கள் பயன்படுத்தும் தளவாடப் பொருள்கள் மிகவும் பழையதாக இருப்பதால் புதிய 100 மேசை நாற்காலிகள் வழங்கப்பட்டிருப்பதாக THULSI MANOGARAN தெரிவித்தார்.

வகுப்பறைகளுக்கு மட்டுமின்றி பள்ளியில் பிரித்தியேக நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்படும் சொகுசு நாற்காலிகளுடனான மேசைகளை வழங்கியதுடன் உடன் இருந்து முழுமையாக அடுக்கிய பின்னர் THULSI MANOGARAN புந்தோங் மெத்தடிஸ்ட் தமிழ்ப்பள்ளியைப் பார்வையிட்டதாகவும் இதன் மொத்த மதிப்பு 33,000 எனும் வகையில் தரமான தளவாடப் பொருள்களைப் பள்ளிக்கு வழங்கியதில் மனம் நிறைந்திருப்பதாகவும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் THULSI MANOGARAN தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *