ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளிக்குப் புதிய வகுப்பறை! மாநில அரசு கூடுதல் நிதி!
- Thinagaren Sanggaren
- 16 Jan, 2026
ஜனவரி 16,
பினாங்கில் உள்ள ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் பொங்கல் விழாவில் பங்கேற்ற பினாங்கு மாநில முதலமைச்சர் Chow Kon Yeow பள்ளியின் உள்கட்டமைப்புகளை நிர்வகிக்கவும் கூடுதலாக 2 வகுப்பறைகள் அமைக்கவும் RM50,000 ரிங்கிட் நிதி வழங்கினார். 339 மாணவர்கள் பயிலும் ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியின் அடைவுநிலை பெருமையடையும் வகையில் இருப்பதாகவும் தாய்மொழிப்பள்ளிகளை அங்கீகரிப்பது பினாங்கு மாநில அரசின் முதன்மை கடமைகளில் ஒன்று என்றும் Chow Kon Yeow தெரிவித்தார். இன்று ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் R.S.N. Rayer உட்பட மாநிலக் கல்வி இலாகாவின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பொங்கல் விழாவில் அனைத்துச் சமூகத்தினரும் பங்கேற்று கொண்டாடலாம் என்பதை ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி நிரூபித்திருக்கிறது. கல்விக் கற்றலுக்கான தளமாக மட்டும் பள்ளிகள் இல்லாமல் பல்லினத்துவத்தின் சமத்துவத்தையும் கற்பிக்கும் ஒரு பள்ளியாக ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி விளங்குவதாக பினாங்கு மாநில முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார். மேலும் இப்பள்ளியில் தற்போது கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாநில அரசின் பங்களிப்பாக இந்த 50,000 ரிங்கிட் நிதி இருக்கிறது என பினாங்கு மாநில முதலமைச்சர் Chow Kon Yeow தெரிவித்தார்.
மாநில அரசிடம் ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளிக்கு வழங்கப்பட்டிருக்கும் நிதி முழுமையாக 2 வகுப்புகளின் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தபடும் என்றும் பினாங்கு மாநில அரசிடமிருந்து தொடர்ந்து பெறப்படும் நிதியும் ஆதரவும் பள்ளிக்கும் மாணவர்களுக்கும் அர்த்தமுள்ளது என ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் Vasagi Devy தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



