அதிகார துஷ்பிரயோகத்திற்குக் கடும் நடவடிக்கை – பாதுகாப்பு அமைச்சர்
- Tamil Malar (Reporter)
- 28 Jan, 2026
கோலாலம்பூர், ஜன. 28-
மலேசிய ஆயுதப் படை (ATM) அமைப்பில் இடம்பெறும் நேர்மைச் சீர்கேடுகள், அதிகார துஷ்பிரயோகங்களை முழுமையாக ஒழிக்க பாதுகாப்பு அமைச்சகம் கடுமையான, தீர்மானமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பாதுகாப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
ஏடிஎம்மில் நிகழும் எந்தவொரு தவறும் பொறுத்துக்கொள்ளப்படாது என்றும், நடவடிக்கை எடுப்பதில் உயர்ந்த பதவி, குறைந்த பதவி என எந்த விதமான பாகுபாடும் காட்டப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார். “உயர்ந்த அதிகாரத்தில் இருப்பவராக இருந்தாலும், கீழ்மட்டத்தில் பணியாற்றுபவராக இருந்தாலும், தவறு செய்தால் ஒரே விதமான நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் கூறினார்.
தவறு நிரூபிக்கப்பட்டால், அவர்கள் ஒரு வீரராக கொண்டிருந்த மரியாதையும் கௌரவமும் இழக்க நேரிடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார். மலேசிய ஆயுதப் படையின் மரியாதை, ஒழுக்கம், நம்பகத்தன்மையை பாதுகாப்பதே அமைச்சகத்தின் முதன்மை இலக்கு என அவர் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு எதிர்கொள்ளும் நபர்கள் தொடர்பில், விவகாரம் நாட்டின் நீதித்துறை அமைப்பிடம் ஒப்படைக்கப்படும் என்றும், சட்டப்படி நியாயமான தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். எந்தவொரு தலையீடும் இன்றி, நீதித்துறை தனது கடமையைச் சுயாதீனமாக மேற்கொள்ளும் என அவர் உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



