சபா கனிம ஊழலில் முதலமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களும்! ஆதாரங்களை வெளியிட்ட Latheefa Koya.

top-news

மார்ச்,


சபா மாநில ஊழல் தொடர்பான ஒரு காணொலி பரவியது தொடர்பான வழக்கில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சபா முதலமைச்சரும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குநராக இருந்த Latheefa Koya ஆதாரத்துடன் தெரிவித்தார். சபா மாநிலத்தின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களைத் தாம் கொண்டிருப்பதாகவும் Latheefa Koya தெரிவித்துள்ளார். 

முன்னதாக இது தொடர்பான விசாரணையில் TAN SRI AZAM BAKI ஆதாரமாக வழங்கப்பட்ட குரல் பதிவுகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்த நிலையில் திருத்தம் செய்யப்படாத முழுமையானக் காணொலியையும் ஆடியோவையும் Latheefa Koya வெளியிட்டுள்ளார். இது தொடர்பானக் காணொலியை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வழங்கியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் MACC மூடி மறைத்துள்ளதாக Latheefa Koya குற்றம் சாட்டினார். சுமார் மில்லியன் கணக்கானப் பணம் லஞ்சமாகப் பறிமாறப்பட்டுள்ளதாகவும் இதன் பின்னனியில் சபா மாநிலத்தின் முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் அவர்களின் சிறப்பு அதிகாரிகளும் சபா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் சம்மந்த்தப்பட்டிருக்கும் காணொலி ஆதாரத்தை TAN SRI AZAM BAKI நிராகரித்ததற்கானக் காரணத்தையும் Latheefa Koya கேட்டுள்ளார். பல மாதங்களாக வெளியிடப்படமால இந்த காணொலிகள் முடக்கப்பட்டதற்கு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் பதிலளிக்க வேண்டும் என Latheefa Koya வலியுறுத்தினார்.

கடந்த 2018 முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் Latheefa Koya லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநராகப் பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bekas Ketua Pesuruhjaya SPRM Latheefa Koya menerima klip video penuh tanpa suntingan berkaitan skandal rasuah lesen mineral Sabah yang membabitkan ketua menteri dan beberapa Adun. Beliau mengkritik kerajaan kerana gagal melindungi pemberi maklumat, Albert. Video penuh akan diserahkan kepada SPRM.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *